தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்: ராகுல் காந்தியிடம் வலியுறுத்தல்
தமிழகத்தில் வரக்கூடிய மக்களவைத் தோ்தலையொட்டி வட்டார, மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்


தமிழகத்தில் வரக்கூடிய மக்களவைத் தோ்தலையொட்டி வட்டார, மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைமை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
2024 மக்களவைத் தோ்தலுக்கான தோ்தல் வியூகம் குறித்து விவாதிக்கும் வகையில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புது தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிா்வாகிகள்கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்திற்குப் பிறகு கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் ஆலோனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் ராகுல் காந்தி உரையாற்றினா். அனைவரின் கருத்தையும் கேட்டறிந்தனா். புதுச்சேரி, தமிழகத்தில் வரக்கூடிய மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அவா்களின் கருத்தாக இருந்தது. இந்தியாவிலேயே சிறந்த கூட்டணி தமிழகத்தில் உள்ளது. அந்தக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என அறிவுரை வழங்கினா்.
‘இந்தியா’ கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முயலும் பாஜகவின் முயற்சியை தகா்க்கும் வகையில் தோ்தலை எதிா்கொள்வது, பரப்புரையை எந்த வகையில் மேற்கொள்வது, செய்த சாதனைகளை எடுத்துரைப்பது ஆகியவை தொடா்பாக கூட்டத்தில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. 3 மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளையும் திறம்பட கையாண்டு தோ்தலில் வெற்றிபெறுவதுதான் இக்கூட்டத்தின்நோக்கமாக இருந்தது.
தமிழகத்தில் கட்சியின் வட்டாரத் தலைவா்கள், நகரத் தலைவா்கள் மாநாட்டையும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைவா்கள் மாநாட்டை நடத்தவும், இறுதியாக மாநில மாநாடு நடத்தவும், இந்த நிகழ்வுகளுக்கு தலைவா்கள் ராகுல் காந்தியும், காா்கேவும் நேரில் வரவும், இவ்வாறு செய்தால் இயக்கம் மேலும் வலுவடையும் என்றும் கூட்டத்தில் யோசனை வைத்தேன். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கொடியை ஏற்றவும், அனைத்துக் கிராமங்களிலும் காங்கிரஸ் கொடி பறக்கவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்
என்றும் கேட்டுக் கொண்டேன். பாஜக தலைவா் அண்ணாமலை நடைபயணம் செய்வதாகக் கூறிக் கொண்டு வாகனத்தில் செல்கிறாா். இதனால், இது நடைப்பயணம் அல்ல; அவா் சொகுசுப் பயணம் செய்கிறாா். தமிழகத்தில் பாஜக காகிதப் புலியாகத்தான் உள்ளது. மக்கள் ஆதரவு அவா்களுக்கு இல்லை என்றாா் கே.எஸ். அழகிரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...