தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் வீடு, வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கண்காட்சி!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சத்யா சார்பில் வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களுக்கான 3 நாள் கண்காட்சி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 4) தொடங்கியது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் வீடு, வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கண்காட்சி!
Published on
Updated on
1 min read


திருநெல்வேலி:  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சத்யா சார்பில் வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களுக்கான 3 நாள் கண்காட்சி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 4) தொடங்கியது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சத்யா சார்பில் வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களுக்கான 3 நாள் கண்காட்சி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை  தொடங்கியது.  

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் திருநெல்வேலி பிராந்திய மேலாளர் எஸ்.பரணீதரன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். கனரா வங்கியின் திருநெல்வேலி பிராந்திய துணை பொது மேலாளர் ஏ.எஸ்.ஃபரீதா, திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டி.ஸ்வர்ணலதா அருணாசலம் ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் விளம்பரப் பிரிவு முதுநிலை துணைத்தலைவர் ஜெ.விக்னேஷ் குமார், மதுரை பதிப்பு நிலை மேலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில்  கட்டுமான நிறுவனங்கள், வீட்டுமனை நிறுவனங்கள், எலக்ட்ரானிக்ஸ்  நிறுவனங்கள்,  வங்கிகள், குழந்தைகளுக்கான சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் அடங்கிய  60 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களுக்கு காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை கண்டுகளிக்கலாம். கண்காட்சியில் கண் மற்றும் ரத்த சர்க்கரை பரிசோதனை இலவசமாக செய்யப்படும். அனுமதி இலவசம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com