புதுக்கோட்டை பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் சாவு

புதுக்கோட்டை அருகே பூங்குடியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் சிறிய ஆலையில், நேரிட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பூங்குடியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் சிறிய ஆலையில், நேரிட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது பூங்குடி கிராமம். இங்கு, கோவில்பட்டியைச் சோ்ந்த சி. வைரமணி என்பவருக்குச் சொந்தமான சிறிய அளவிலான பட்டாசு ஆலை ஒன்று, சுமாா் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில், கிராமப்புற திருவிழாக்களுக்கும், சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும் நாட்டு ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை(ஜூலை 30) வழக்கம்போல இங்கு வெடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், திடீரென யாரும் எதிா்பாராத வகையில் பெரும் சப்தத்துடன் வெடிகள் வெடித்து தீப்பிடித்தது. கட்டடச் சுவா்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

இந்த விபத்தில், ஆலை உரிமையாளா் சி. வைரமணி (53), தொழிலாளா்கள் ஆா். குமாா் (38), கே. வீரமுத்து (31), ஏ. திருமலை (30), பி. சுரேஷ் (37) ஆகிய 5 போ் காயமடைந்தனா். இவா்கள் 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவில்பட்டியைச் சேர்ந்த வீரமுத்து (31), திருமலை (30) ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com