இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றைக்கும் ஏற்காது: உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது, இந்தி மொழி குறித்த பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றைக்கும் ஏற்காது: உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது, இந்தி மொழி குறித்த பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளூா் மொழிகளுக்குப் போட்டியாக இந்தி இல்லை. எந்த எதிர்ப்புமின்றி இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார். 

அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில், 

இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டிற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை 'உள்ளூர் மொழி (Local Language) என்று சுருக்குவது எனும் பாஜகவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது.

பல மொழிகள், இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை பாஜகவும், மத்திய அரசும் நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com