கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 73, 206 பேர் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பரிசுத் தொகையை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, நான் குறிப்பிட்டு காட்டியது போல, இந்த ஆண்டு, கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியில், 73 ஆயிரத்து 206 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்தப் போட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான். பல்வேறு வெளிநாட்டு தூதர்கள் வருகை தந்திருக்கிறார்கள். எனவே இது சாதாரண மாரத்தான் அல்ல, இது சமூகநீதி மாரத்தானாக அமைந்திருக்கிறது. நாம் எதைச் செய்தாலும், அதிலே ஒரு பெரிய சிறப்பு இருக்கும், பெருமை இருக்கும், பூரிப்பு இருக்கும், மகிழ்ச்சி இருக்கும், எழுச்சி இருக்கும், எல்லாவற்றையும் தாண்டி புதுமையும் இருக்கும், புரட்சியும் இருக்கும், அதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. மாரத்தான் ஓட்டம் என்பது உடல் உறுதிக்கு மட்டுமல்ல, உள்ள உறுதிக்கும் அடித்தளமாக அமையும்.
நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கூட்டுச் செயல்பாட்டை வலியுறுத்தும். இப்படியான போட்டிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும். உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக, ஆனபிறகு, விளையாட்டுத் துறை மேலும் பல மடங்கு எழுச்சி பெற்றிருக்கிறது. உலகப் புகழ் பெற்ற போட்டிகள் நடக்கும் மாநிலமாக, ஏற்கனவே செஸ் போட்டியை நடத்தினோம், இப்போது ஹாக்கி போட்டியை நடத்தி கொண்டிருக்கிறோம். இதுபோன்ற பல போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிகளை அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. இது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி கொண்டிருக்கிறது.
ஏராளமான புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் இது பயன்படுகிறது. அனைத்திலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் எண்ணினார். அந்த எண்ணம் இன்றைக்கு ஈடேறிக்கொண்டு இருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


