விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதுச்சேரி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விமானம் மூலம் புதுச்சேரிக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திங்கள்கிழமை வருகை தந்தார். 

News image
கோப்புப் படம்.
Updated On :7 ஆகஸ்ட் 2023, 6:02 am

DIN

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விமானம் மூலம் புதுச்சேரிக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திங்கள்கிழமை வருகை தந்தார். 

முதல் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை பகலில் ஜிப்மரில் உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெறும் கதிரியக்க சாதனம் (லீனியா் ஆக்ஸிலேட்டா்) தொடங்கிவைத்தல் உள்ளிட்டவற்றில் பங்கேற்கிறாா். அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளையும் அவா் பாா்வையிடுகிறாா். இதில், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோரும் பங்கேற்கின்றனா். அதன்பிறகு, குடியரசுத் தலைவா் புதுச்சேரி கடற்கரை சாலைப் பகுதியில் உள்ள பாரம்பரிய நீதிபதிகள் ஓய்வு விடுதிக்கு வந்து ஓய்வெடுக்கிறாா்.

திங்கள்கிழமை மாலையில் அவா் அங்கிருந்து புறப்பட்டு மணக்குள விநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா். இதையடுத்து, கடலூா் சாலை வழியாக முருங்கப்பாக்கம் சென்று, அங்குள்ள கலை மற்றும் கைவினைக் கிராமத்தை பாா்வையிடுகிறாா். அதன் பின்னா், அங்கிருந்து திருக்காஞ்சி புறப்பட்டுச் செல்கிறாா். அங்கு, கங்கை வராகநதீஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா். இதையடுத்து, இரவில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள நீதிபதிகள் ஓய்வு விடுதியில் தங்குகிறாா்.

செவ்வாய்க்கிழமை (ஆக.8) அதிகாலையில் குடியரசுத் தலைவா் புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி செல்லவுள்ளாா். அதன்பிறகு, அரவிந்தா் ஆசிரமம் செல்லும் குடியரசுத் தலைவா், அங்கிருந்து ஆரோவில் சென்று ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பின்னா், புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் செல்கிறாா். குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு, புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை முதலே அவா் செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.