
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைந்துள்ளது வருத்தம் அளித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
அரசு உருவாக்கித்தரும் அனைத்து வாய்ப்புகளையும் மாணாவர்கள் பயன்படுத்த வேண்டும்.
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. படிக்க வேண்டிய காலத்தில் அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும்.
யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.25 ஆயிரம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
நான் முதல்வன் திட்டத்தை உதயநிதி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில்தான் வெற்றி அடங்கியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.