பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உங்கள் கனவுகளை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம்: கருணாநிதிக்கு ஸ்டாலின் புகழஞ்சலி

உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம். அதனை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம் என்று கருணாநிதிக்கு உருக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 ஆகஸ்ட் 2023, 3:45 am

DIN


சென்னை: உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம். அதனை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம் என்று கருணாநிதிக்கு உருக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகம் முதல் அண்ணா சதுக்கத்தில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.

இந்த நிலையில் கருணாநிதிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உருக்கமாக புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில், தலைவர் கருணாநிதி..! நீங்கள் இருந்து செய்ய வேண்டியதைதான், நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்!

தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று இந்தியாவுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களே, அப்படித்தான் இந்தியாவுக்கான குரலை எழுப்ப தொடங்கி இருக்கிறோம். அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு. 

சுயமரியாதை, சமூகநீதி, சம தர்மம், மொழி, இன உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி இந்தியா என்ற உங்கள் கனவுகளை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம் என்று உருக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.