சென்னை டிபிஐ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் க. அன்பழகனின் முழு உருவச் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) திறந்துவைத்தார்.

சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் செயல்பட்டு வரும் டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும், அங்கு அவரது சிலை நிறுவப்படும், சிறந்த பள்ளிகளுக்கு அவரது பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
இதையும் படிக்க | ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

அதன்படி, டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று கடந்த டிசம்பரில் பெயர் சூட்டப்பட்டு நூற்றாண்டு வளாகமும் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் க. அன்பழகனின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், க.அன்பழகனின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

