வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமுமின்றி 6.5 சதவீதமாகத் தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
இதனால் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் தில்லியில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற நிதிக்கொள்கை கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது, மேலும் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளதால் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் பொருளாதாரம் நிலையான வேகத்தில் வளர்ச்சி கண்டு வருவதாகவும் உலகின் 5 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறி வருவதாகவும் கூறிய ஆளுநர் சக்திகந்த தாஸ், இந்திய பொருளாதாரம் உலக வளர்ச்சியில் 15% பங்களிப்பதாகக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: அரங்கநாதா், வனபத்திரகாளியம்மன், மலை ரயிலால் புகழ்பெற்ற மேட்டுப்பாளையம்!

கருணாநிதி போட்டியிடாத ஒரே தேர்தல்!

மதுரை தெற்கு! எதிர்பார்ப்பில் நெசவாளர்கள்!

தொடர்ந்து 7வது ஆண்டாக ஜமா மசூதியில் தொழுகைக்குத் தடை!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

