12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் பண்ணையில் தீ: 3,000 கோழிக்குஞ்சுகள் பலி

காஞ்சிபுரம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பண்ணையில் தீ: 3,000 கோழிக்குஞ்சுகள் பலி

Published On :

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவர் முசரவாக்கம் - முத்துவேடு சாலை கன்னியம்மன் கோவில் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கோழி பண்ணையில் 3,000 பிராய்லர் கோழிக்குஞ்சுகள் வளர்ந்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் திடீரென கோழிப்பண்ணையின் கூரையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கோழிப்பண்ணையில் எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

Story image

இருப்பினும் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ முழுவதும் பரவி கோழிப்பண்ணையிலிருந்த 3,000 கோழிக்குஞ்சுகளும் தீயில் எரிந்து உயிரிழந்தது.

இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு தயாராகி வந்த கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.