உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

திருவாடானை மகாலிங்க மூர்த்தி சாமி கோயிலில் ஆடித் திருவிழா

திருவாடனையில் மணிமுத்து ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி சாமி கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.  

News image

திருவாடானை ஆற்றங்கரை மகாலிங்க மூர்த்தி சுவாமி கோயிலில் ஆடித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

Updated On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

திருவாடானை: திருவாடனையில் மணிமுத்து ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி சாமி கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருவாடனையில் மணிமுத்தாற்றின் கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூக்குழித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 4ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.

Story image

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படி தாரர்களின் உபய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

முன்னதாக  நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்பாக பால்குடம், மயில் காவடி, வேல் காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்து நான்கு ரத வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை வந்து அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தீயில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை  செலுத்தினர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

இதில் உள்ளூர் சுற்றுவட்டார கிராம மக்கள் வெளியூர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.