கோவை: கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி 3 ஆவது வார்டு பெண் கவுன்சிலர், அவரது கணவர், மகன் ஆகியோரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மலுமிச்சம்பட்டி அவை நகரைச் சேர்ந்தவர் சித்ரா (44) 3 ஆவது வார்டு கவுன்சிலர். இவர் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு வீட்டில் இருந்தபோது, திடீரென முகக்கவசம் அணிந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சித்ரா, அவரது கணவர் ரவிக்குமார் (47), மகன் மோகன் (24) ஆகியோரை அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து படுகாயங்களுடன் இருந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மலுமிச்சம்பட்டி ஊராட்சி 3 ஆவது வார்டு பெண் கவுன்சிலர் சித்ரா
சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சித்ரா 3.5 செண்ட் நிலம் வாங்கியதாகவும், ஆனால் அதற்கான புரோக்கர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராஜா (24) என்பவர் மேலும் 4 பேருடன் சேர்ந்து சித்ராவின் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டதோடு, அவர்களை அரிவாளால் வெட்டிச் சென்றது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் இருந்து அரிவாள்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பிச்சென்ற ராஜா உள்ளிட்ட 5 நபர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மூழ்கும் கப்பல்களை கரை சோ்க்கும் நீா்மூழ்கிக் கப்பல் அதிமுக: திண்டுக்கல் சீனிவாசன்

போலீஸ் விசாரணையில் இளைஞா் உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக டிஎஸ்பி உள்பட 11 போலீஸாருக்கு அழைப்பாணை

இருவேறு சம்பவங்களில் இணையவழியில் ரூ.ஒரு கோடி மோசடி

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

