சுதந்திர நாளையொட்டி சென்னை மெரினாவில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
76வது சுதந்திர நாளையொட்டி தமிழ்நாட்டில் ஒத்திகை நிகழ்ச்சிகள் கட்ந்த 4ஆம் தேதிமுதல் தொடங்கியது. மொத்தம் மூன்று நாள்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது.
ஏற்கெனவே ஆகஸ்ட் 4, 10 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (ஆக. 13) அணிவகுப்பு இறுதி ஒத்திகை நடைபெற்று வருகிறது.
கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவல் படை உள்ளிட்ட 7 படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
ஒத்திகைக்காக ராஜாஜி சாலையிலும், காமராஜா் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒத்திகை நேரத்தில் நேப்பியா் பாலத்திலிருந்து போா் நினைவுச் சின்னம் வரை காமராஜா் சாலையிலும், போா் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இதயம் முரளி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இரவு 10 மணி வரை சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

லிவ்-இன் உறவில் இருப்போருக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பொருந்தும்: உச்சநீதிமன்றம்

இந்திய அளவில் ரூ. 300 கோடி வசூலித்த ஸ்பைடர் மேன் திரைப்படம்!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



