வழக்குரைஞர் தடா சந்திரசேகரன் காலமானார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகளுக்காக வாதாடியவர் தடா சந்திரசேகரன்.
தடா சந்திரசேகரன் (கோப்புப் படம்)
தடா சந்திரசேகரன் (கோப்புப் படம்)

வழக்குரைஞர் தடா நா. சந்திரசேகரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 64.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு தடா சந்திரசேகரன் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஆக. 14) திங்கள்கிழமை மாலை காலமானார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகளுக்காக வாதாடியவர் தடா சந்திரசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தடா சந்திரசேகரன் உடல் இறுதி அஞ்சலிக்காக, சென்னை கொட்டிவாக்கம், ஜெகநாதன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி வரையில் வைக்கப்படவிருக்கிறது. 

அதன்பிறகு, அவரது உடல் மதுரை கே.கே. நகர் இல்லத்திற்கு இரவு 7 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டு, புதன்கிழமை காலை 9 மணியளவில் இறுதி நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com