குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை!

சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :14 ஆகஸ்ட் 2023, 9:50 am

DIN

சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் நேற்று பிற்பகல் தொடங்கிய கனமழை, விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால், பூமி குளிர்ச்சியடைந்தது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

ஆனால், இன்று காலை முதல் மீண்டும் வெயில் கொளுத்தி வந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. 

அதன்படி, சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகின்றது. 

மேற்கு திசை காற்றும், தென் மேற்கு திசை காற்றும் சந்தித்ததன் காரணமாகவே இந்த திடீர் கனமழை என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இன்று, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.