கரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்!

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் ஆட்சியர் த.பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். 
கரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்!

இந்தியத் திருநாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் ஆட்சியர் த.பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதான புறாக்களையும் தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் முன்னிலை வகித்தார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இல்லம் தேடி கல்வி, பொதுப்பணித்துறை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 225 நபர்களைப் பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி கௌரவித்தார்.

மேலும், வருவாய்த்துறையின் சார்பில் வீட்டுமனைப் பட்டா 4 நபர்களுக்கும், சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை 08 நபர்களுக்கும், 2 நபர்களுக்கும் பட்டா மாறுல் உத்தரவுகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 5 நபர்களுக்கும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் நீட்ஸ் திட்டத்தின் சார்பில்  என மொத்தம் 34 நபர்களுக்கு ரூ.98 இலட்சத்து 98 ஆயிரத்து 820 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர் மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  வாணி ஈஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) கவிதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியர்(பொ) சந்தியா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் பிரபு. சுரேஷ்குமார், கரூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com