நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

நான்குனேரி சம்பவம்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிக்கை சமர்ப்பிப்பு

நான்குனேரி சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சமர்ப்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவரை அமைச்சர் தங்கம் தென்னரசு, பேரவைத் தலைவர் அப்பாவு சந்தித்தபோது(கோப்புப்படம்)

Published On :2 பிப்ரவரி 2024, 8:20 am IST

நான்குனேரி சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சமர்ப்பித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் சாதிய கொடுமையால் பிளஸ் 2 மாணவரை பிற சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

இதில் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரையும் அவரது தங்கை சந்திராசெல்வியும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வேதனை தெரிவித்து இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். 

பள்ளியில் மாணவர் சின்னதுரைக்கு சக மாணவர்களால் நேர்ந்த சாதியக் கொடுமைகள் குறித்து விரிவான தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாணவர் மற்றும் அவர் தங்கையை, விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் சேர்த்து அவர்களது கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடையே சாதி பாகுபாடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் வகுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.