சொந்தக் காசில் சாலையை சீரமைக்கும் திருவேற்காடு மக்கள்

மோசமான சாலைகளால் பலர் பாதிக்கப்படுவதைப் பார்த்த திருவேற்காடு மக்கள், தங்களது சொந்த பணத்தை செலவிட்டு சாலையை சீரமைத்து வருகிறார்கள்.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..
Updated on
1 min read


சென்னை: மோசமான சாலைகளால் பலர் பாதிக்கப்படுவதைப் பார்த்த திருவேற்காடு மக்கள், தங்களது சொந்த பணத்தை செலவிட்டு சாலையை சீரமைத்து வருகிறார்கள்.

சென்னையின் புறநகரான திருவேற்காடு பகுதியும், மற்றப் பகுதிகளைப் போலவே மோசமான சாலைவசதியைக் கொண்டிருக்கும் இடமாக உள்ளது.

பள்ளமான சாலைகளில் கற்களைக் கொட்டி மூடுவது, உடைந்த கழிவுநீர் கால்வாய் மூடிகளை மாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வானகரம், ராஜீவ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பல்வேறு துறையினர் சாலைகளில் பள்ளம் தோண்டி கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொண்டனர். இதனால் சாலைகள் பலவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டன.

பிறகு சாலையை சீரமைக்கப்படாததால், குண்டும் குழியுமாக மாறியது. மழை பெய்தால், வாகன ஓட்டிகள் சாலைகளில் விழுந்து எழும் நிலைதான் உருவானது. பல முறை மனுகொடுத்தும் எந்த பலனும் இல்லை என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

இதனால் பல சாலை விபத்துகளும் நேரிடுகின்றன. காலையில் பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர், விபத்தில் சிக்கும்போது நிலைமை மோசமடைகிறது. பள்ளி ஆட்டோ வேன்கள் கூட இப்பகுதிக்கு வர மறுப்பதாகவும், ஓலா, ஊபர் போன்ற செயலிகள் மூலமாக இயங்கும் ஆட்டோக்களும் வர மறுப்பதாகவும் பகுதி மக்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில்தான், பொதுமக்களே ஒன்று சேர்ந்து தங்களது சொந்தக் காசை செலவிட்டு சாலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com