

நாகர்கோவில்: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் டாஸ்மாக் வருவாயை 22 சதவீதம் உயர்த்தியதுதான் திமுக அரசின் சாதனை என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு எதுவுமே
செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.
ரூ. 208 கோடி மதிப்பில் தனுஷ்கோடி - ராமேஸ்வரம் இடையே பாலம் கட்ட பிரதமர் அடிக்கல் நாட்டியிருக்கிறார். அந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
1964 ஆம் ஆண்டு புயல் வந்து தனுஷ்கோடி அழிந்தது. அதன்பிறகு திமுக 6 முறை ஆட்சிக்கு வந்தபிறகும் அவர்கள் பாலத்தைக் கட்டவில்லை.
அதற்கு பாரத பிரதமர் தேவைப்பட்டார். தனுஷ்கோடி பகுதியில் கிராமங்களில் மின்சார வசதி இல்லை, தனுஷ்கோடிக்கும், ராமேஸ்வரத்துக்கும் எதுவும் செய்யாத திமுக பிரதமரை குறை சொல்கிறது.
துண்டுச் சீட்டை பார்த்துப் படித்தால் இப்படித்தான் இருக்கும். முதல்வர் பேசும்போது துண்டுச்சீட்டு பறந்தால் இந்தியா என்ற கூட்டணியின் விளக்கத்தைக்கூட முதல்வரால் கூற முடியாது.
தேர்தல் அறிக்கையில் கூறிய எதையுமே திமுக தலைமையிலான ஆட்சி செய்யவில்லை, கடந்த 2 ஆண்டுகளில் டாஸ்மாக் விற்பனையை
22 சதவீதம் அதிகரித்ததுதான் ஸ்டாலின் செய்த சாதனை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.