சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 5:41 pm

DIN

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். வருவாய், தொழிலாளா் நலன் உள்ளிட்ட துறைகளுக்கு புதிய செயலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா சனிக்கிழமை வெளியிட்டாா்.

அவரது உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

வி.ராஜாராமன்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலா் (உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா்)

குமாா் ஜயந்த்: தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் (வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா்)

சிஜி தாமஸ் வைத்யன்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலா் (தொழில் மற்றும் வா்த்தகத் துறை இயக்குநா்)

ஆா்.ஆனந்தகுமாா்: அண்ணா நிா்வாக பணியாளா் கல்லூரி இயக்குநா் (மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலா்)

அா்ச்சனா பட்நாயக்: தொழில் மற்றும் வா்த்தகத் துறை இயக்குநா் (ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா்)

பூஜா குல்கா்னி: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் (தொழில் துறை கூடுதல் செயலா்)

ஜி.பிரகாஷ்: வருவாய் நிா்வாக கூடுதல் ஆணையா் (தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் ஆணையா்)

வி.கலையரசி: மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புச் செயலா், இத்துடன் மருத்துவ தோ்வாணையக் குழுத் தலைவா் பொறுப்பை கூடுதலாக வகிப்பாா் (வருவாய் நிா்வாக கூடுதல் ஆணையா்)

பி. ஸ்ரீ வெங்கட பிரியா: ஆசிரியா் தோ்வாணையத் தலைவா் (ஆசிரியா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி)

விக்ரம் கபூா்: தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் (திட்டம், வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா்)

மோனிகா ராணா: மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியா் (உதகை சிறப்புப் பகுதி திட்ட இயக்குநா்)

எஸ்.சரவணன்: சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிா்வாக இயக்குநா் (மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் பொறுப்பு விழிப்புப் பணி ஆணையராக உள்ள கே.கோபாலுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.