ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர் தற்கொலை: உறவினர்கள் போராட்டம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதசுவாமி கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்கள்.
ராமநாதசுவாமி கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்கள்.
Published on
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் மற்றும் சக  ஊழியர்கள் பணியை புறக்கணித்து இணை ஆணையர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பணியாற்றும் உசிலம்பட்டியைச் சேர்ந்த நவீன் சந்துரு(35).  இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளர். பல நாள்களாக தொடர்ந்து 14 மணிநேரம் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தொடர்ந்து மன அழுத்ததில் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், நவீன்சந்துரு வெள்ளிக்கிழமை இரவு தந்தை  சுப்பையாவுக்கு கைபேசியில் தான் தற்கொலை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளர். 

இதனை கேட்ட அதிர்ச்சியடைந்த தந்தை, சக பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து சக பணியாளர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு நவீன் சந்துரு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சந்துருவை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, சனிக்கிழமை காலையில் நவீன் சந்துரு குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்கள் ராமநாதசுவாமி கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பாதிப்புக்குள்ளாகினர். 

இதனைதொடர்ந்து, அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அப்புறபடுத்தினர். 

இதன் பின்னர் அவர்கள் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், பணியாளர்களுக்கு பணிச்சுமையை குறைக்க வேண்டும், ஊழியர் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும், அவரது பணியை குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கிட வேண்டும் மற்றும் பணிச்சுமையை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com