புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வேதாரண்யம் மீனவர்கள் 21 பேர் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் 

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2023, 8:58 am

DIN


வேதாரண்யம்: வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளனர்.

 ஆற்காட்டுத்துறையிலிருந்து பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான படகில்  அவருடன் அருள்ராஜ், செல்வமணி, தினேஷ்  ஆகிய 4 மீனவர்கள் திங்கள்கிழமை  பகலில் கடலுக்குள் சென்றனர்.

Story image

நடுக்கடலில் மீன்  பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கொள்ளையர்கள்  தாக்குதல் நடத்தினர். இதே போல,மேலும் 5 படகுகளில் இருந்த ஆற்காட்டுத்துறையைச் சேர்ந்த 21 மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

Story image

கரை திரும்பிய மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Story image

இந்த நிலையில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் மீனவர்களை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என். கௌதமன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட விவரம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். தொடர்ந்து மீனவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.