/

மேட்டூர் பாமக எம்எல்ஏ மீது வரதட்சிணை கொடுமை வழக்கு

மருமகளிடம் வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்தியதாக மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது 6 பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:52 am

DIN

சேலம்: மருமகளிடம் வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்தியதாக மேட்டூர் பாமக மேட்டூர் பாமக எம்எல்ஏ மீது வரதட்சணை கொடுமை வழக்கு மற்றும் அவரது குடும்பத்தார் மீது 6 பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து சூரமங்கலம் மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் மாநகர் சூரமங்கலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோலியா (24). இவருக்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாமகவை சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் கடந்த 2019 ம் வருடம் திருமணம் நடந்தது.

தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சங்கர் அவரது மனைவி மனோலியாவை தகாத வார்த்தைகளால் பேசியும், அடித்தும் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை பெற்றோர் கண்டிக்காமல் அவர்களும், மனோலியாவை இழிவாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் மனோலியா சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். தனது கணவர் சங்கர் மற்றும் மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் தன்னை வரதட்சிணை பணம் கேட்டு கொடுமை செய்து வந்ததாக கூறி உள்ளார்.

இந்த புகாரின்  அடிப்படையில் போலீசார் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் அவரது மனைவி பேபி, மகன் சங்கர், மகள் கலைவாணி,  ஆகிய 4 பேர் மீது கொலை முயற்சி, ஆபாசமாக தீட்டுதல், பெண்கள் மீதான வன்கொடுமை, வரதட்சிணை கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாமக எம்எல்ஏ தன் குடும்பத்துடன் சென்னையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் முன்பு முன்ஜாமின் பெறுவதற்காக நடவடிக்கைகளை எம்எல்ஏ சதாசிவம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டப்பேரவை தலைவருக்கு சேலம் மாநகர போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

பாமக சட்டமன்ற உறுப்பினர் மீது வரதட்சிணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.