விராலிமலை: கிரேன் விழுந்து தனியார் ஆலை தொழிலாளி பலி!

விராலிமலை தனியார் தொழிற்சாலையில் அதிகாலை நேரிட்ட விபத்தில்  தொழிலாளி உயிரிழந்தார்.
விராலிமலை: கிரேன் விழுந்து தனியார் ஆலை தொழிலாளி பலி!

விராலிமலை: விராலிமலை தனியார் தொழிற்சாலையில் அதிகாலை நேரிட்ட விபத்தில்  தொழிலாளி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே இயங்கி வருகிறது வால்வு உள்ளிட்ட உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை (சன்மார் பவுண்ட்ரி).

இங்கு நூற்றுக்கணக்கான நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு மூன்று ஷிப்ட் முறையில் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இங்கு ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றிய விராலிமலை அருகே உள்ள ராஜாளிபட்டியை சேர்ந்த பிச்சை மகன் செல்வம் (52) இத்தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அவர் தொழிற்சாலையில் பணியில் இருந்த போது அதிகாலை கிரேன் கொக்கி தலையில் பட்டு பர்னஸ் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் கூறியது, இறந்த செல்வம் பணியாற்றி வந்த ஒப்பந்த முறையில் ஆன தனியார் நிறுவனம் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் தொழிலாளிக்கு வழங்காமல் பணிய அமர்த்தி வருவதாகவும், இதனால் அவ்வப்போது சிறு விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த பெரும் விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், பாதுகாப்பு உபகரணமான தலைக்கவசம் செல்வத்திற்கு வழங்கியிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறினர்.

விராலிமலை சுற்றுப்பகுதியை பொறுத்தவரை நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவ்வாறாக இயங்கி வரும் பல தொழிற்சாலைகளில் இதுபோல பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலேயே தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.

எனவே, தொழிற்சாலை ஆய்வாளர்கள் அவ்வப்போது தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக தொழிலாளிக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தொழிலாளிகள் மத்தியில் தற்போது வலுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com