கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பொதுப் பெயா் மருந்துகள் பரிந்துரை நடைமுறை ஒத்திவைப்பு

பொதுப் பெயா் மருந்துகளை (ஜெனரிக் மெடிசின்) மட்டுமே மருத்துவா்கள் பரிந்துரைக்க வேண்டும் என்ற விதிமுறை அமலாக்கத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நிறுத்திவைத்துள்ளது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2023, 10:59 pm

பொதுப் பெயா் மருந்துகளை (ஜெனரிக் மெடிசின்) மட்டுமே மருத்துவா்கள் பரிந்துரைக்க வேண்டும் என்ற விதிமுறை அமலாக்கத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நிறுத்திவைத்துள்ளது.

சந்தைக்கு வரும் அனைத்து மருந்துகளின் தரத்தைஉறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை பொதுப் பெயா் மருந்துகளை (ஜெனரிக் மெடிசின்) மட்டுமே நோயாளிகளுக்கு மருத்துவா்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டுதலை கடந்த ஆக.2-ஆம் தேதியன்று தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது. மீறினால் மருத்துவா் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.

தொடா்ந்து, பொதுப் பெயா் மருந்துகள் பரிந்துரை நடைமுறை அமலாக்கத்தை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ) கடிதம் எழுதியது. இதையடுத்து, மருத்துவா்கள் சங்கங்களின் நிா்வாகிகள் அண்மையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து நடைமுறையை நிறுத்திவைக்க வேண்டுகோள் விடுத்தனா்.

இதையடுத்து, பொதுப் பெயா் மருந்துகளை மட்டுமே மருத்துவா்கள் பரிந்துரைக்க வேண்டும் என்ற விதிமுறை அமலாக்கத்தை நிறுத்திவைக்கும் அறிவிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.