ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,000 கன அடியாக குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் காவிரி ஆற்றில் அதிகபட்சமாக விநாடிக்கு 17,000 கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்திருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு கடந்த 10 நாட்களாக தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து சரிந்து வரும் நிலையில் சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 7,000 கன அடியாக நீர்வரத்து குறைந்து தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால், காவிரி ஆற்றில் மீண்டும் பரிசல்கள் இயக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அனுமதி அளித்துள்ளார். பரிசல்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வார விடுமுறையான சனிக்கிழமை ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாமரத்து கடவு பரிசல் துறையில் இருந்து மணல்மேடு வரை குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனர்.
தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



