சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 29) உள்ளூா் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.


ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு நாளை (ஆகஸ்ட் 29) உள்ளூா் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூா் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை ஈடு செய்யும் வகையில், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செப்டம்பா் 2 ஆம் தேதி முழு பணி நாளாக செயல்படும்.
இந்த உள்ளூா் விடுமுறை நாள், செலவாணி முறிச் சட்டம் 1881-இன்கீழ் வராது என்பதால் உள்ளூா் விடுமுறை அறிவிக்கும்போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...