ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் நாளை கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
கேரளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக - கேரளா எல்லையான கோவை மாவட்டத்தில் கேரளத்தைச் சேர்ந்த மலையாள மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
அதேபோல அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் மலையாள மக்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதனால் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களாகவே ஓணம் பண்டிகை வருவதையொட்டி பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை 29ஆம் (செவ்வாய்க்கிழமை)தேதி ஓணம் பண்டிகையை ஒட்டி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு பதிலாக, செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முழு பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் கோவையில் உள்ள மலையாள மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு தங்களது சொந்த ஊரான கேரளம் செல்லத் துவங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குல்வீர் சிங் மீண்டும் அசத்தல்... காமன்வெல்த் 5,000 மீ. ஓட்டத்தில் இந்தியாவுக்கு முதல் வெண்கலம்!
2 நாள்களில் அணை நிரம்பியது எப்படி? - பெ. சண்முகம் கேள்வி!

காதர் மொகிதீனின் மகன் மறைவு; முதல்வர் விஜய் இரங்கல்
குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் தொடங்கியது!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



