விழுப்புரம்: மூன்று சட்டங்களின்பெயர்களை மாற்றம் செய்யும் வகையில் மசோதாக்களைத் தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியத் தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிய சட்டங்களை ஹிந்தி - சமஸ்கிருத பெயர் மாற்றும் வகையில் மத்திய அரசு 3 மசோதாக்களைத் தாக்கல் செய்தது. இதை கண்டித்து விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் விழுப்புரம் வழக்குரைஞர் சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்துக்கு குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எம்.காளிதாஸ் தலைமை வகித்தார். பல்வேறு வழக்குரைஞர் சங்கங்களின் நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தடுமாறும் மும்பை: ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய முகேஷ் குமார்!

பொது சிவில் சட்டம் பழங்குடியினரைப் பாதிக்காது: அஸ்ஸாம் முதல்வர்!

மகளிர் உரிமைத் தொகை போலவே ரூ. 8,000 இல்லத்தரசி கூப்பன்! - அமைச்சர் கீதா ஜீவன்

கான் சிட்டி படத்தில் இன்னும் எத்தனை கதாபாத்திரங்கள்?
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


