நடிகர் ரஜினிகாந்த் தனது பூர்வீக ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்திற்கு வருகை தந்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் அக். 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதற்கு முன்னதாக இமயமலை சென்ற ரஜினி, தமிழ்நாடு திரும்பும் வழியில் அரசியல் தலைவர்களைச் சந்தித்தார்.
தொடர்ந்து இரு நாள்களுக்கு முன்பு பெங்களுருவில் ஜெயநகரில், தான் பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய பணிமனைக்குச் சென்று, பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்களை சந்தித்துப் பேசினார்.
இதன் தொடர்ச்சியாக தனது பூர்வீக ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு ரஜினி இன்று வருகை தந்துள்ளார்.
தனது சகோதரர் சத்யநாராயண ராவுடன் சேர்ந்து நாச்சிக்குப்பத்தில் உள்ள தனது பெற்றோர் நினைவிடத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech

கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்!

”தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்!” MK Stalin வெளியிட்ட விடியோ | DMK

உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
