நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாகச் சுற்றி வரும் புதிய விடியோ ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை(ஆக. 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம்: மத்திய அரசு
முதலில் லேண்டர் தரையிறங்கிய நிலையில் பின்னர் ரோவரும் தரையிறங்கி நிலவு மேற்பரப்பின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.
இந்த புகைப்படங்களின் மூலமாக நிலவின் மேற்பரப்பில் கந்தகம்(சல்ஃபா்) இருப்பதை பிரக்யான்' ரோவா் கண்டறிந்துள்ளதாகவும் ஹைட்ரஜனுக்கான தேடல் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்தது.
தொடர்ந்து, பிரக்யான் ரோவரின் செயல்பாடுகளை இஸ்ரோ விடியோ மூலமாக வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், நிலவில் பாதுகாப்பாக ரோவர் சுற்றி வரும் விடியோவை வெளியிட்டுள்ள இஸ்ரோ, 'பாதுகாப்பான பாதையைத் தேடி ரோவர் சுழற்றப்பட்டபோது லேண்டர் விக்ரம் இதனை படம்பிடித்துள்ளது. ரோவர் சுற்றி வருவதை ஒரு குழந்தையைப் போல் அல்லவா, விக்ரம் லேண்டர் கண்காணித்து வருகிறது' என்று பதிவிட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
The rover was rotated in search of a safe route. The rotation was captured by a Lander Imager Camera.
It feels as though a child is playfully frolicking in the yards of Chandamama, while the mother watches affectionately.
Isn't it? pic.twitter.com/w5FwFZzDMpâ ISRO (@isro) August 31, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (05.08.2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மகிழ்ச்சி!

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 05) - கடக ராசியா பதவி உயர்வு நிச்சயம்!
எச்சரிக்கை மணி கேட்கிறதா?
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK


