தேவாரத்தில் முருக பக்தர் வெட்டி படுகொலை: காவல் துறையினர் தீவிர விசாரணை
தேவாரத்தில் முருக பக்தர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

காவல் துறையினர் விசாரணை விசாரணை - கோப்புப்படம்
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தேவாரத்தில் முருக பக்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தேவாரம் காவல் நிலையம் பின்புறத்தில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக சனிக்கிழமை அதிகாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தேவாரம் போலீசார், படுகொலை செய்யப்பட்டுள்ள நபர் முருகனுக்கு மாலை அணிந்து இருப்பதாகவும், அவரது பெயர், எந்த ஊர் போன்ற விவரங்கள் எதுவும் தெரியாத நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட நபர் உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரத்தை சேர்ந்தவராக இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Murugan devotee hacked to death in Devaram; police conducting intensive investigation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


