ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மிக்ஜம் புயல்:அவசர உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு!

மிக்ஜம் புயல் வரும் டிச.4-ஆம் தேதி காலை கரையை கடக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில்,அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு.

News image
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி (கோப்புப்படம்)
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

DIN


மிக்ஜம் புயல் வரும் டிச.4-ஆம் தேதி காலை கரையை கடக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில்,அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு.

இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சின்னம் காரணமாக புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழை சூறாவளியை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. 

மக்கள் அவசர உதவிக்கு மாநில அவசரகால மையத்தில் 24 மணிநேரமும் இயங்கும் 1070 மற்றும் 1077 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். இதுதவிர, துறைவாரியான கட்டணமில்லா தொலைபேசியுடன் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. 

மின்துறை- 1912, சுகாதாரத்துறை- 108,104, காவல்துறை - 100, 112, 1931, 1073, 1091, தீயணைப்புத்துறை- 101, கடலோர காவல் படை- 1554 என்கிற எண்மைத் தொடர்புகொள்ளலாம்.

பொதுமக்கள் வதன்திகளை நம்ப வேண்டாம் என்றும் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளாதவரை பாதுகாப்பு முகாம்களைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். 

அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

அரசு மேற்கொள்ளும் பேரிடர் உதவி தொடர்பான நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.