தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

வங்கிகள், ஐடி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகள்,ஐடி, நிதி நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை(டிச.4) பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

DIN


சென்னை: மிக்ஜம் புயல் திங்கள்கிழமை(டிச.4)-ஆம் தேதி காலை கரையை கடக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகள், ஐடி, நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை(டிச.4) பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கக் கடல் பகுதியில் மிக்ஜம் புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக தனியார் நிறுவனங்களுக்கு நாளை(டிச.4) விடுமுறை அளிப்பது தொடர்பாக ஞாயிற்றுக்கிழம மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் நலன்கருதி முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மிக்ஜம் புயல்  திங்கள்கிழமை(டிச.4)-ஆம் தேதி காலை கரையை கடக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகள், ஐடி, நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை(டிச.4) பொது விடுமுறை அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 

மேலும், பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்த வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மிக்ஜம் புயலால் கனமழையுடன், 60-70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.