

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. குறிப்பாக வடபழனி, வளசரவாக்கம், அம்பத்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராய நகர், அண்ணாநகர், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதன்காரணமாக வாகனங்கள் செல்லமுடியாமல் தவித்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.