சென்னை விமான நிலையத்தில் வெள்ளம்: விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், 20 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

சென்னை: சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், 20 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், புறப்பட வேண்டிய மற்றும் தரையிறங்க வேண்டிய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

இதனிடையே, மிக அவசியமாக இருந்தால் மட்டுமே விமான பயணத்தை மேற்கொள்ளுமாறும், அவசியம் இல்லாவிட்டால் பயணத்தை ரத்து செய்யவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com