சென்னை: சென்னையில் இன்று மாலைவரை மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால், சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மேலும், பல்வேறு பிரதான சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலைவரை மழை நீடிக்கும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் முழுவதும் கனமழை பெய்துள்ளது. புயலின் மேற்கு மேகக் கூட்டங்கள் கடந்த 12 மணிநேரமாக சென்னை மீது உள்ளதால், கனமழை பெய்து வருகின்றது. இந்த மேகக் கூட்டங்கள் மெதுவாக நகர்வதால், மாலை வரை மழை நீடிக்கும். அதீத கவனத்துடன் இருக்கவும். மின்சாரம் உடனடியாக வரும் என்பது உறுதியில்லை. வெளியில் செல்வதை தவிர்க்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.
கனமழைக்கான எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு

காலை, மாலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்: ஆட்சியா் வலியுறுத்தல்

அவதூறு வழக்கில் பாஜக எம்எல்ஏவுக்கு அழைப்பாணை அனுப்பிய மாஜிஸ்திரேட் உத்தரவு ரத்து: தில்லி நீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறும்: ஸ்வாதி மாலிவால் நம்பிக்கை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

