சென்னை: சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரும் நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் 3 நாள்களாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் நகரின் பல்வேறு இடங்களில் மக்கள் தவித்து வருகின்றனர்.
மழை குறைந்ததை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை முதல் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர். பல்வேறு நபர்களும், தொண்டு நிறுவனங்களும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுடன் இணைந்து உதவ முன்வரும் நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் 9791149789, 9445461712, 9895440669, 7397766651 ஆகிய எண்கள் மூலம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.