வழக்கம்போல் இயங்க தொடங்கிய புறநகர் ரயில்கள்!

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் இன்றுமுதல்  வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வழக்கம்போல் இயங்க தொடங்கிய புறநகர் ரயில்கள்!
Published on
Updated on
1 min read

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் இன்றுமுதல்  வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நிக்ஜம் புயல் காரணமாக புறநகர் ரயில் சேவை பாதிக்கபட்டு இருந்த நிலையில் இன்று முதல் திருமால்பூர்  - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ரயில் சேவை துவங்கி உள்ளது.

கடந்த ஒரு வார காலமாகவே பெய்த கன மழை காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முதல் மழைப்பொழிவு இல்லாததாலும், வழித்தடங்களில் நீர் முற்றிலும் குறைந்ததாலும் இன்று முதல் புறநகர் ரயில் சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு ரயில் சேவை துவங்கியது.

தொடா்ந்து, வியாழக்கிழமை முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேசின் பிரிட்ஜ் பகுதியில் வெள்ள பாதிப்பு குறைந்த நிலையில் சென்னை சென்ட்ரல் - ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம் வழித்தடத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிமுதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டன.

இன்று முதல் சென்னை சென்ட்ரல் - திருத்தனி வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கியுள்ளது.

சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருவொற்றியூரில் இருந்து 30 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com