மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலியானார். தந்தை கண் முன்னே, தலை நசுங்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2023, 6:15 am


சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலியானார். தந்தை கண் முன்னே, தலை நசுங்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் காவிரிகாட்டூர் சொக்கலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது குழந்தை ஜனுஷிகா(8). இவர் வயலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில், தனது தந்தை ஜம்புலிங்கத்துடன் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை காலை பள்ளிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். 

சிலுவைபுரம் அருகே சென்றுகொண்டிருந்த போது புவனகிரி பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து டாரஸ் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கிழுந்த சிறுமியின் தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் தந்தையின் கண் முன்னே சிறுமி பலியானார். ஜம்புலிங்கம் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிதம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.