இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்!

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:55 pm IST

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள உதயநிதி, மக்களவையில் மர்ம நபர்கள் புகுந்து புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பின்மையையே காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காத வகையில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

Story image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்தபோது, மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று பிற்பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்தனர்.

‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை அவையில் வீசினர். அவர்களை மடக்கிப் பிடித்த எம்.பி.க்கள் அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.