ரூ. 6,000 நிவாரணம்: சென்னை வேளச்சேரியில் முதல்வர் தொடக்கிவைக்கிறார்
மிக்ஜம் புயல் நிவாரணத் தொகை வழங்குவதை வருகிற டிச. 17 ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார்.


மிக்ஜம் புயல் நிவாரணத் தொகை வழங்குவதை வருகிற டிச. 17 ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார்.
தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டது.
மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகைக்கு நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | யாருக்கெல்லாம் புயல் நிவாரணம் ரூ.6,000 கிடைக்கும்? அரசாணை வெளியீடு
வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணத் தொகை வழங்குவதை தொடக்கிவைக்கிறார்.
சென்னையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில் அஷ்டலக்ஷ்மி நகரில் முதல்வர் இதனை தொடக்கிவைக்க உளளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...