சென்னை மாநகரம் அவ்ளோ பாதுகாப்பானதா?

நாட்டில் உள்ள ஆறு மெட்ரோ நகரங்களில், சென்னைதான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகராமக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மாநகரம் அவ்ளோ பாதுகாப்பானதா?


சென்னை: நாட்டில் உள்ள ஆறு மெட்ரோ நகரங்களில், சென்னைதான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய குற்றப் பதிவு அமைப்பானது வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2022ஆம் ஆண்டு சென்னை மாநகரில் பெண்களுக்கு எதிராக 736 வழக்குகள் மட்டுமே காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 874 வழக்குகளைக் காட்டிலும் குறைவு. இதில் தாக்குதல், பாலியல் தொல்லை, கடத்தல், வரதட்சிணை, பலாத்காரம், அடித்தல் உள்ளிட்ட புகார்களும் உள்ளடக்கம்.

மும்பை மற்றும் பெங்களூரு மாநகரங்களல் கிட்டத்தட்ட தலா 3 ஆயிரம் வழக்குகளும், தில்லியில் அதிகபட்சமாக 14 ஆயிரம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையின கண்காணிப்பு, சிசிடிவி கேமராக்கள் பொருத்தம், காவல் வாகனங்களின் சோதனை, முக்கியமான இடங்களில் பாதுகாப்பு உளிட்டவை, சென்னையில் குற்றங்கள் குறையக் காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதில் மகிழ்ச்சியடைய ஒன்றும் இல்லை என்றும், இதுபோன்ற ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும், 2022ஆம் ஆண்டு பதிவான ஒட்டுமொத்த வழக்கில் 59 வழக்கில் மட்டுமே காவல்துறையினர் நீதியை நிலைநாட்யதாகவும், 1878 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சாட்சிகள் பிறழ்சாட்சியமானது உள்ளிட்ட பல காரணங்களால் 109 வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், சென்னையில் பெண் காவல்துறையினரின் கண்காணிப்பு அதிகம். பெண்களும் தற்போது அநீதிகளுக்கு எதிராக புகாரளிக்க முன் வருகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை புதிய செயலி உள்ளிட்ட பல பாதுகாப்பு விஷயங்களை அறிமுகப்படுத்தியும், நடைமுறைப்படுத்தியும் வருகிறது என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com