நெல்லையில் முக்கிய சாலைகள் துண்டிப்பு: முழு விவரம்!

நெல்லையை மையமாகக் கொண்டு செயல்படும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் முக்கிய சாலைகள் துண்டிப்பு: முழு விவரம்!

நெல்லையை மையமாகக் கொண்டு செயல்படும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதி கனமழை பெய்து வருகிறது.

நெல்லையில் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல்லை - தூத்துக்குடி இடையேயான தேசிய நெடுஞ்சாலை இன்று காலை துண்டிக்கப்பட்டது.

நெல்லையை மையமாகக் கொண்டு துண்டிக்கப்பட்ட சாலைகளின் விவரம்:

நெல்லை - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை. துண்டிப்பு.

நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு.

நெல்லை - தூத்துக்குடி சாலை துண்டிப்பு.

நெல்லை - கோவில்பட்டி சாலை தச்சநல்லூரில் துண்டிப்பு.

நெல்லை புதிய பேருந்து நிலையம் -  அம்பை சாலை முன்னீர்பள்ளம் முதல் பல இடங்களில் துண்டிப்பு.

பேட்டை - பழைய பேட்டை  இணைப்பு சாலை துண்டிப்பு.

நெல்லை  டவுண் - சேரன்மகாதேவி சாலை துண்டிப்பு.

முக்கூடல் - கடையம் சாலை துண்டிப்பு.

இடைகால் - ஆலங்குளம் சாலை துண்டிப்பு.

அம்பை - கல்லிடை - வெள்ளங்குளியில் பெரு வெள்ளத்தால் சாலை துண்டிப்பு.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக, நெல்லை, செங்கோட்டை, திருச்செந்தூருக்கான 9 ரயில்களின் சேவை திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com