தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 5% அதிகம்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 5 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 5% அதிகம்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 5 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு இயல்பை விட 5 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது. 

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய நிலையில், டிசம்பர் 18 இன்று வரை 418.7 மி.மீ மழைப் பதிவாக வேண்டிய நிலையில் 440.8 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பிலிருந்து 5 சதவீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 17-ம் தேதி முதல் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகின்றது. அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்னம், திருச்செந்தூர் உள்ளிட்ட 39 மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில், இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 5 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com