நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

வெள்ளம் பாதித்துள்ள நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

வெள்ளம் பாதித்துள்ள நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை ஆலோசனை நடத்தினார்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 2 நாள்காக கனமழை பெய்து வருகிறது. 

வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி சென்றுள்ளார்.

எனவே தில்லியில் இருந்தவாறே திங்கள்கிழமை காணொலி வாயிலாக, வெள்ளம் பாதித்துள்ள நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்துறைச் செயலாளர் மற்றும் போக்குவரத்து துறைச் செயலாளருடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com