சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். 

News image
பிரதமருடன் முதல்வர் சந்திப்பு
Updated On :20 டிசம்பர் 2023, 2:15 am

DIN

தில்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். 

இந்தச் சந்திப்பின்போது வெள்ள பாதிப்பாக ரூ.12,659 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தற்காலிகமாக ரூ.7,033 கோடியை வழங்க வேண்டும் என்றும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரு.2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  தமிழகத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிக்ஜம் புயல் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இந்தச் சேதங்கள் குறித்து மத்திய குழுவினா் நேரில் ஆய்வு செய்து சென்றனா்.

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீா்செய்ய தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடியும் வழங்க வேண்டுமென மத்திய குழுவினரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா்.‘மிக்ஜம்’ புயலின் தாக்கம் தணிந்து மக்கள் இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பத் தொடங்கிய தருணத்தில், இப்போது திருநெல்வேலி-தென்காசி-தூத்துக்குடி-கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள் கன மழை, வெள்ள பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இந்த மாவட்டங்களில் அதிக அளவு உள்கட்டமைப்புகள் சேதமாகியுள்ளன. இந்த நிலையில், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீா் செய்யத் தேவையான நிதியை ஒதுக்குமாறு பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்துகிறாா்.முன்னதாக, பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி அவருக்கு முதல்வா் கடிதம் எழுதியிருந்தாா். அதன் அடிப்படையில் அவரைச் சந்திக்க பிரதமா் நேரம் ஒதுக்கியுள்ளாா்.

பின்னர் சென்னை திரும்பும் முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.