புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லியில் கேஜரிவாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

தில்லி பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் சந்தித்து பேசினார்.

News image
தில்லியில் கேஜரிவாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
Updated On :19 டிசம்பர் 2023, 6:00 am

DIN

தில்லி: தில்லி பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் சந்தித்து பேசினார்.

தில்லியில் இன்று நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணி’யின் நான்காவது கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். 

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை இரவு 10.30 மணியளவில் நேரில் சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் கன மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீா் செய்யத் தேவையான நிதியை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளாா்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வருகைதந்த தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் ஜேஜரிவால் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்பி தயாநிதி மாறம், ஆம் ஆத்மி எம்பி ராகுல் சாத்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Story image

மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரையும் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து அரவிந்த் கேஜரிவால் வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.