தூத்துக்குடியில் நாளை(டிச.21) முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை புதன்கிழமை (டிச.20) ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை வியாழக்கிழமை(டிச.21) ஆய்வு மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நாளை(டிச.21) முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!


தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை புதன்கிழமை (டிச.20) ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை வியாழக்கிழமை(டிச.21) ஆய்வு மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய பெய்த கனமழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டபள்ளது. இதனை எதிர்கொள்ளவும், மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் குடிமைப் பணி அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், அந்த பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், முன்னதாக புதன்கிழமை (டிச.20) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த சூழ்நிலையில், மத்தியக் குழு புதன்கிழமை (டிச.20) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளது.இதனால் மாவட்ட நிர்வாகம் அவர்களுடன் இருக்க வேண்டிய நிலையைக் கருத்தில்கொண்டு,புதன்கிழமை இரவு மதுரை சென்று அடுத்த நாள் வியாழக்கிழமை(டிச.21)தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com